தரணியில் மலரட்டும் இயேசுவின் ஆட்சி
தலைமுறை தலைமுறை தொடரட்டும் மாட்சி
புறப்படு நீ திருச்சபை செயல்பாடு நீ அதி விரைவே
அறுவடை மிகுதி ஆளில்லையே – 2
1.
இந்திய மண்ணில் எண்ணற்ற கோடி
எங்கெங்கோ அலைகிறார் இறைவனைத் தேடி
சிந்தையில் கலக்கம் மனதினில் மயக்கம்
அங்கங்கே தவிக்கிறார் அமைதியைத் நாடி
இந்த நிலை நீக்கவேண்டும் விந்தை ஒளி ஈர்க்கவேண்டும்
மந்தைக்குள் பலரைச் சேர்க்கவேண்டும் – 2 -(தரணியில்)
2.
இமயத்தில் துவங்கி குமரி வரையில்
இம்மானுவேலனை வணங்கிடவேண்டும்
சமயங்கள் பலவும் சகலமும் படைத்த
சர்வாதி கர்த்தரைப் பணிந்திடவேண்டும்
பாரதமே மாறவேண்டும் பரனேசுவைச் சேரவேண்டும்
பரிசுத்த ஆவியின் மாரி வேண்டும் – 2 -(தரணியில்)
3.
ஞாலத்தில் முழுதும் நற்செய்தி பரவும்
வேளைதான் முடிவின் அடையாளம் தெளிவாய்
காலத்தை உணர்வோம் கடுமையாய் உழைப்போம்
கர்த்தரின் வருகை நெருங்குதே விரைவாய்
அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
அவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2 -(தரணியில்)
dharaniyil malarattum iyesuvin aatchi
dhalaimurai dhalaimurai thodaraddum matchi
purabpadu nee thirussabai seyalpadu nee athi viraive
aruvadai mikuthi aalillaiye – 2
1.
inththiya mannil ennatrra kodi
engkengko alaikirar iraivanaith thedi
sinththaiyil kalakkam manathinil mayakkam
angkangke dhavikkirar amaithiyaith nadi
inthdha nilai neekkavendum vinththai oli iirkkavendum
manththaikkul palarais serkkavendum – 2 -(dharaniyil)
2.
imayaththil thuvangki kumari varaiyil
immanuvelanai vanangkitavendum
samayangkal palavum sakalamum padaithdha
sarvathi karthdharaib paninththitavendum
baradhame maravendum paranesuvais seravendum
parisuthdha aaviyin mari vendum – 2 -(dharaniyil)
3.
nyalaththil muzhuthum narseythi paravum
velaithan mudivin adaiyalam thelivay
kalaththai unarvom kadumaiyay uzhaippom
karthdharin varukai nerungkuthe viraivay
azhaippin kural kedkalaiyo avasaramum puriyalaiyo
avakasam mudinthdhathu kilampalaiyo – 2 -(dharaniyil)